தீவிரமாகப் பரவிவரும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, "இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு வசதி அளிக்கும் நோக்கில், ஏர் சுவிதா தளத்தில் தொடர்பில்லா சுய அறிவிப்பை விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளன.
ஆகஸ்ட் 2020இல் தொடங்கப்பட்ட ஏர் சுவிதா தளம், 2021 நவம்பர் 30ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட பயண வழிகாட்டுதல்களுக்கு இடமளிக்கும் வகையில் இப்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்வதேச பயணிகளின் வருகையை எளிதாக்கும் வகையில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தளம், ஆர்டிபிசிஆர், தடுப்பூசி நிலை போன்றவற்றுடன் பயணிகளின் பயணம் மற்றும் தங்கும் விவரங்களை வழங்குவதற்கு உதவுகிறது.