காஷ்மீர்: காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் தொற்றுநோய் பரவல் வேறு அதிகரித்தது. இதனால் ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் திருநங்கைகள் மற்ற சமூகத்தினருடன் தொடர்பின்றி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370ஆவது சட்டப்பிரிவு திருத்தப்பட்டது. இதனால் அம்மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது. மேலும் மாநிலமும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியனாக மாற்றப்பட்டது.
இது அங்குள்ள அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருநங்கை சமூகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் இல்லை. இதனால் தெருக்களில் நடனம் ஆடி பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈடிவி பாரத்துடன் பேசிய திருநங்கைகளின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சோன்சலின் தலைவர் டாக்டர் அய்ஜாஸ் அகமது பந்த் கூறுகையில், “இதுவரை எந்தவொரு அரசாங்கமும் அவர்களுக்காகவோ அல்லது அவர்களின் உரிமைகளுக்காகவோ எதையும் செய்யவில்லை. அவர்கள் இக்கட்டான நேரத்திலும் எழுப்பும் கோரிக்கைகளையும் கண்டுகொள்வதில்லை.