தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2021, 4:00 PM IST

ETV Bharat / bharat

ஓபிசி பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்

மூன்றாம் பாலினத்தவரை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை ஒன்றிய சமூக நீதித் துறை ஒற்றிய அமைச்சரவைக்கு அனுப்பிவைத்துள்ளது.

ஓபிசி
transgender

டெல்லி:மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை, மரியாதை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவரை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை ஒன்றிய சமூக நீதித் துறை ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் நிறைவேற்றப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் கீழ் மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருநங்கைகள் தினம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details