வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, வேங்காரா தொகுதியில் போட்டியிடும் கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர் களத்தில் இறங்கி பரப்புரை செய்துவருகிறார்.
ஜனநாயக சமூக நீதி கட்சி சார்பில் போட்டியடும் அவரை எதிர்த்து ஐக்கிய ஜனநாயக முன்னணியின் குஞ்சாலிகுட்டியும் இடது ஜனநாயக முன்னணியின் ஜிஜியும் களம் காண்கின்றனர்.
களத்தில் இறங்கிய முதல் திருநங்கை வேட்பாளர் தேர்தலில் பலமான வேட்பாளர்களை எதிர்த்து களம் காணும் அவர், வெற்றியையும் தோல்வியையும் ஒரு பொருட்டாக கருதவில்லை எனக் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மூன்றாம் பாலினத்தவரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே தேர்தலில் போட்டியிடுகிறேன்.
சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு பதில் எனது இருப்பை தெரியப்படுத்த விரும்புகிறேன். எனது சமூகத்தை பிரதிநிதித்துவதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். தேர்தலில் வெற்றிபெற்றால் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்காக பணி ஆற்றுவேன்" என்றார்.