தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆண் போல நடித்து இளம்பெண்ணை ஏமாற்றிய திருநங்கை கைது - இளம்பெண்ணை காதலித்த திருநங்கை கைது

ஆணின் பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி, இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

Facebook
Facebook

By

Published : Jul 23, 2022, 7:39 PM IST

தக்‌ஷின கன்னடா: கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், முகநூல் மூலம் அறிமுகமான ஒரு இளைஞருடன் நட்பாக பழகியுள்ளார். அந்த நபர் தான் ஒரு பொறியாளர் என்று கூறி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். முகநூலில் குறுஞ்செய்தி அனுப்புவது, செல்போனில் பேசுவது என்று இவர்களின் காதல் நீண்டுள்ளது. இந்த விவகாரம் இளம்பெண்ணின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர், தனது குடும்ப நண்பரான ஷைலஜா என்ற வழக்கறிஞரிடம் தனது மகளின் காதல் குறித்து பகிர்ந்துள்ளார்.

மகள் காதலிக்கும் அந்த இளைஞர் குறித்து விசாரிக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் ஷைலஜா போலீசாரின் உதவியுடன் அந்த இளைஞரின் இருப்பிடத்தை தேட ஆரம்பித்துள்ளார். உடுப்பி மாவட்டம் சங்கரநாராயணா என்ற இடத்தில் இருப்பதை கண்டுபிடித்து, அவரை கண்காணித்துள்ளனர். அதில், இந்த இளைஞர் ஆண் இல்லை, திருநங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை ஏமாற்றிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி காட்சி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details