மகாராஷ்டிரா: இன்று (ஜூலை.16) பிற்பகல் 3.30 மணியளவில் ஜல்கானில் உள்ள வர்தி கிராமத்திற்கு அருகே உள்ள மலைப்பாதையில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயிற்றுநர் நூருல் அமீன் (30) பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பயணித்த பயிற்சி விமானியான அன்ஷிகா குஜார் (24) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.