டெல்லி: மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மூலம் 28 நாள்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காலத்தை நீட்டிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒரு மாதம் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் (Prepaid recharge) திட்டங்களை அறிவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 28 நாள்கள் மட்டுமே வேலிடிட்டியை வழங்குகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் 28 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்.