பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நின்றுகொண்டு நபர் ஒருவர் 10 ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசினார். அதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் நடந்துசென்ற நபர்கள் முண்டியடித்துக்கொண்டு எடுக்க முயன்றனர்.
இந்த சம்பவத்தால் எப்போது பரபரப்பாக காணப்படும் கே.ஆர்.மார்க்கெட் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோட் ஷூட் அணிந்துகொண்டு, கழுத்தில் கடிகாரத்துடன் பரபரப்பான சாலையில் திடீரென பணத்தை வீசிய அந்த நபர் யார்? எதற்காக அப்படி செய்தார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட டிப்டாப் ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.