புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டிகளுக்குப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் போக்குவரத்து காவல் துறையினர் ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக உடம்பில் தலையின்றி (மாயத்தோற்றம்) ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.