சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு, கர்நாடகாவில் கரோனா பரவல் காரணாமக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து அண்டை மாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான விடுமுறை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக கடற்கரை சாலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலும், 1ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையிலும் சோனாம் பாளையம் சந்திப்பு வழியாக வந்து பழைய துறைமுகத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும். புத்தாண்டுக்கு முன்னதாக 31ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் பகுதிக்கு ஏற்பாடுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். புதுச்சேரி டவுன் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் வரும் ஜனவரி 3ஆம் தேதி காலை 6 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களையும் புதுச்சேரியில் இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் சாலை ( கிழக்கு கடற்கரை சாலை ) நோக்கி செல்லும் பேருந்துகள் நெல்லிதோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், வழியாக செல்ல வேண்டும்.அதேபோல், ஈசிஆர் சாலையில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் சிவாஜி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், மற்றும் இந்திரா காந்தி சதுக்கம் வழியாக புதுச்சேரி பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இந்த தற்காலிக ஏற்பாடுகளை செயல்படுத்த போக்குவரத்து காவல் துறை சார்பில் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தாமதமாவதற்கு யார் காரணம்? கிரண்பேடி Vs நாராயணசாமி