தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் வணிகர்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர் என அகில இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் தெரிவித்துள்ளார்.
14,000 கோடி ரூபாய் இழப்பு
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த 26 நாள்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் வணிகர்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். நான் ஒன்றுக்கு, 50 ஆயிரம் அண்டை மாநில டிரக்குகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு செல்லும். அதேபோல், டெல்லியிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு 30 ஆயிரம் டிரக்குகள் செல்லும். தற்போது நடைபெற்றுவரும் போராட்டத்தால், இதுமாதிரியான 20 விழுக்காடு டிரக்குகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.