உலகம் முழுவதும் வாழும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் உண்டாகும் மாதவிடாய் சுழற்சியால் பல பெண்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த சிக்கல்களை தீர்க்கவும் பெண்களின் மாதவிடாய் குறித்து அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து சரியான தீர்வுகளை அளிக்க கூடிய ஒரு புதிய முறையை வாட்ஸ் அப் மற்றும் சிரோனா நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ‘சிரோனா பீரியட் டிராக்கர்’ முறை ஆகும்.
சிரோனா என்பது ஒரு இந்திய சுகாதார நிறுவனமாகும். இந்நிறுவனம் மாதவிடாய் சுழற்சியை சரிபார்க்க பெண்களுக்காக வாட்ஸ் அப்பில் பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் பீரியட் டிராக்கிங் டூல் பயன்படுத்த எளிதாக உள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் சிரோனா நிறுவனம் இணைந்து வாட்ஸ்அப் சிரோனா வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட்டிற்கு "ஹாய்" என அனுப்புவதன் மூலம் மாதவிடாய் சுழற்சி, கருதரித்தல் மற்றும் கரு முட்டை உருவாக்கம் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இதனை பயன்படுத்த விரும்புபவர்கள் +919718866644 என்ற எண்ணிற்கு ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பி, அதன் சில கேள்விகளுக்கு பதிலளித்து விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் குறிப்புக்கு இனி வாட்சப் குறுஞ்செய்தி சமீப காலங்களில் சிரோனா செயலியை மேலும் மேம்படுத்தியுள்ளது. இது மாதவிடாய் குறித்த ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பற்றி விளக்குகிறது. இது மட்டுமில்லாமல் மின் வணிக பயன்பாடு, கல்வி உள்ளடக்கம், சமூக ஈடுபாடு கால கண்காணிப்பு ஆகியவற்றை பற்றிய தகவலும் அளிக்கிறது. சிரோனா மூலம் எந்த தயக்கம் மற்றும் பயம் இல்லாமல் தங்கள் இதயத்திற்கு நெருக்கமான விஷயங்களை விவாதிக்க ஒரு "சகோதரி" போன்ற உணர்வை தருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
மாதவிடாய் குறிப்புக்கு இனி வாட்சப் குறுஞ்செய்தி இதையும் படிங்க:அதிர்ச்சி: மாதவிடாய் கறைக்கு அபராதம் விதித்த ஹோட்டல்!