இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனித தலமான ஷீரடிக்கு பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி ரயில் விடுவதற்காக பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பிரதமரின் ‘பாரத் கெளவரவ்’ திட்டத்தின் மூலம் தனியார் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு இந்த ரயில் சேவை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அரசின் ரயில்வே சேவையை தவிர்த்து தனியார் சேவை தொடங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.