தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவ மாணவர்களுக்காக என்ன திட்டம்? திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கேள்வி - மருத்துவ மாணவர்களுக்காக என்ன திட்டம்?

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி
திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி

By

Published : Mar 14, 2022, 6:41 PM IST

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (மார்ச். 14) தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று திமுக மக்களவை எம்.பி., டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தார்.

மக்களவை தொடங்கியவுடன் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, "உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்காக ஒன்றிய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? ரஷ்யாவுடன் இந்திய அரசுக்கு இருக்கும் உறவைப் பயன்படுத்தி இந்த மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, "இது மருத்துவ மாணவர்கள் தொடர்பான சர்ச்சை. இது சுகாதார அமைச்சகத்தின்கீழ் வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க:நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details