இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
’நாட்டிற்கு அடித்தளமிட்ட தொலைநோக்கு பார்வையாளர் நேரு’: ராகுல் காந்தி புகழாரம் - ராகுல் காந்தி தொடர்புடைய செய்திகள்
டெல்லி: நாட்டிற்கு அடித்தளமிட்ட தொலைநோக்கு பார்வையாளர் ஜவஹர்லால் நேரு என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
Rahul Gandhi
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்கு பிறந்தநாள். அவர் சகோதரத்துவம், சமத்துவம், என்ற மேம்பட்ட நோக்கத்துடன், நவீன கண்ணோட்டத்துடன் நமது நாட்டிற்கு அடித்தளமிட்ட தொலைநோக்கு பார்வையாளர். எங்களது முயற்சிகளும் இந்த நன்மதிப்புகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:முன்னாள் பிரதமர் நேருவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!