தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர் - அறுவை சிகிச்சை

உத்தரப்பிரதேசத்தில் பிரசவ வலிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் துண்டு வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர்
உபியில் பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர்

By

Published : Jan 4, 2023, 10:25 PM IST

அம்ரோஹா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பான்ஸ்-கெரியில் பகுதியில் வசிக்கும் ஷம்ஷர் அலியின் மனைவி, நஸ்ரானா. கர்ப்பமாக இருந்த நஸ்ரானா, பிரசவ வலி காரணமாக கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சைஃபி நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர் மட்லூப் என்பவரால் நஸ்ரானாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் நஸ்ரான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அவரை மீண்டும் அந்த நர்சிங் ஹோமில் அனுமதித்தனர். அங்கு ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், குளிரான வானிலை காரணமாக தான் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

ஆனாலும், வலி நீடித்ததால் நஸ்ரானா அம்ரோஹாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது தான் வயிற்றில் துண்டு வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பிறகு துண்டு பிரித்தெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நஸ்ரானாவின் கணவர் சம்ஷர் அலியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இதுவரை எழுத்துப்பூர்வ புகார் எதுவும் காவல் நிலையத்தில் தரவில்லை. இருப்பினும் அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரியின் (CMO) சமூக வலைதளம் மூலம் இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணி.. பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details