திருவனந்தபுரம்:இந்திய கடற்படையின் மதிப்புமிக்க டி-81 கப்பல் தனது 20 ஆண்டு சேவைக்குப் பிறகு ஆலப்புழா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. கப்பற்படையிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட டி-81 கப்பலானது, மும்பையில் இருந்து கொச்சிக்கும், பின்னர் அங்கிருந்து சேர்தலாவுக்கும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், 106 சக்கரங்கள் கொண்ட சூப்பர் டிரக்கில் வைத்து கப்பலானது ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இதற்கா, நீர்முக்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைியல் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. டி-81 கப்பலானது இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியுடன், கோவா கப்பல் கட்டும் தளத்தில் 25 மீட்டர் நீளம், 60 டன் எடையுடன் தயாரிக்கப்பட்டது. இது, 1999ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது.