தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எனக்கு எதிராக துணைநிலை ஆளுநர் போட்டியிட முடியுமா? - அமைச்சர் சவால்! - Lieutenant Governor of Puducherry

புதுச்சேரி: எனக்கு எதிராக துணைநிலை ஆளுநர் போட்டியிட முடியுமா என சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Jan 10, 2021, 10:50 PM IST

புதுச்சேரி யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக கூறி, அவரை திரும்பப்பெற கோரி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மூன்றாவது நாளாக இன்று (ஜனவரி 10) அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணைநிலை ஆளுநர் மக்களுக்கு தடுத்த நலத்திட்டங்களை குறித்தும் ஆட்சிக்கு கொடுத்த தொந்தரவு குறித்தும் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் எனக்கு எதிராக போட்டியிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details