நாட்டின் நெடுஞ்சாலை விபத்துகள், கட்டமைப்பு குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், 2018ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 843 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 191ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 3,400 கிமீ தொலைவிலான நெடுஞ்சாலைகள் ஆறு வழி சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 6,250 கிமீ-ஐ தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், 2020ஆம் ஆண்டு கோவிட்-19 லாக்டவுன் காரணமாக சாலைப்போக்குவரத்து வழக்கம் போல இல்லை. எனவே, அந்தாண்டு சாலை விபத்துகள் எண்ணிக்கை ஒப்பீட்டு கணக்கில் கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பாஜகவின் 'உளவாளி' மம்தா - காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு