தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் - பாரமுல்லா என்கவுன்டர்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட கமாண்டர் உள்பட மூவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

By

Published : Jun 21, 2021, 10:53 AM IST

பாரமுல்லா:வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபோரின் குண்ட் பிராத் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தடைசெய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த உயர்மட்ட காமாண்டர் உள்பட மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

காவல் துறை தகவலின்படி, தேடப்பட்டுவந்த முக்கிய பயங்கரவாதியான முடசிர் பண்டிட் - பாதுகாப்புப் படையினர், முக்கிய அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்த அரசியல் வல்லுநர்கள் உள்ளிட்டோர் மீது பலமுறை தாக்குதல் நடத்தியவர் என்பது தெரியவருகிறது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் வீழ்த்தப்பட்ட மற்றொரு பயங்கரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்ரர் என்ற அப்துல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் இந்தப் பகுதியில் 2018 லிருந்து தீவிரமாகச் செயல்பட்டவர்.

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

சோபோரில் லஷ்கர் இ தொய்பாவின் உயர்மட்ட கமாண்டர் முடாசிர் பண்டிட் அண்மையில் 3 காவலர்கள், இரண்டு கவுன்சிலர்கள், பொதுமக்களில் இருவர் எனச் சுட்டுக்கொன்றார் என காஷ்மீர் மண்டல ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

ABOUT THE AUTHOR

...view details