இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவிவரும் மோதல் போக்கு குறித்து இரு தரப்பிலும் ராணுவப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு சீனா பெரும் படையைத் திரட்டிவந்து முற்றுகையிட்டதை அடுத்து இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் இந்திய வீரர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், சில மாதங்கள் போர் மேகம் சூழந்திருந்தது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவத் தலைமைகளும் பேச்சு வார்த்தை நடத்தியதில் பாங்காங்க் ஏரிப் பகுதியிலிருந்து படை விலக்கப்பட்டது. அதேவேலை லடாக்கை ஒட்டிய எல்லைப்பகுதியில் சீனாவின் படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.