ஹரித்துவார் (உத்தரகாண்ட்): இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகம் மிகவும் முக்கியமானது. இன்று எந்த ஒரு விஷயத்திலும் ஆன்மீக வாதிகள் குரல் கொடுக்கிறார்கள். இதற்காக சமூக வலைதளங்களை ஆன்மீக வாதிகள் பயன்படுத்துகின்றனர். அது அவர்கள் சார்ந்த மதத்தை பரப்புவதாக இருந்தாலும் சரி, பின்பற்றுபவர்களுடன் நேரடியான தொடர்பாடலாக இருந்தாலும் சரி, அனைத்திலும் அவர்களது சமூக வலைதள பக்கங்கள் ஆக்டிவாகவே உள்ளது.
ராம்தேவ்: ஆன்மீக வாதிகளின் சமூக ஊடக அறிக்கையில், ராம்தேவ் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ராம்தேவுக்கு ரசிகர்கள் உள்ளனர். ராம்தேவ் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதற்கான காரணம், அவரது சமூக ஊடக குழு தொடர்ந்து அவரது ரீல்ஸ்கள், புகைப்படங்கள், அறிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதுதான்.
ராம்தேவின் சமூக வலைதள கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவின் ரீச் மில்லியனைக் கடக்கிறது. இது மட்டுமின்றி, அவரது அறிக்கைகள் மற்றும் அவரது ரீல்ஸ்களையும் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இதனால் ராம்தேவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கைலாசானந்த் கிரி:ராம்தேவுக்குப் பிறகு, நிரஞ்சனி அகாராவின் ஆச்சார்யா மஹாமண்டலேஷ்வர் கைலாசானந்த் கிரியின் பெயர் இந்தப் பட்டியலில் வருகிறது. கைலாசானந்த் கிரி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவரது வழிபாடு தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவர்களின் வழிபாடு சில நேரங்களில் சமூக ஊடக பக்கங்கள் மூலம் நேரலையில் வெளியிடப்படுகிறது.
சித்தானந்த் முனி:சித்தானந்த் முனி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இவர் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் சமூக ஊடகக் குழுவால் அடிக்கடி ரீல்ஸ்களும் பதிவேற்றப்படுகின்றன. இது மட்டுமின்றி, அவரது பரமார்த் நிகேதனின் கங்கா ஆரத்தி தினமும் அவரது பக்கத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது.
பல ஆன்மீக வாதிகள் தங்கள் சமூக ஊடகங்களைக் கையாள தனிப்பட்ட குழுவை வைத்திருக்கிறார்கள். இதற்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விரைவில் நித்தியானந்தா ரீஎன்ட்ரீ..! சமாதி முடியப்போகுதாம்-கைலாசா அப்டேட்