தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தை காணலாம்.

Top 10 news @ 7 AM
Top 10 news @ 7 AM

By

Published : Sep 30, 2021, 7:02 AM IST

1.சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

2. 'சிங்காரச் சென்னை 2.0' - இந்தாண்டுக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

3. சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடக்கம்

சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்றுமுதல் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

4. கலை, அறிவியல் கல்லூரி: கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் உயர்வு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாத தொகுப்பூதியத்தை ரூ. 15 ஆயிரத்திலிருந்து, ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி உயர் கல்வித்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

5. புகையில்லா தீபாவளி: ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

டெல்லியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது தகுந்த இடைவெளியைத் தவிர்க்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், காற்று மாசுவினால் ஏற்படும் பாதிப்பு பல மடங்காக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதன் காரணாக ஜனவரி 1ஆம் தேதிவரை பட்டாசுகள் வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

6. ’போலி உத்தரவுக்கு பணம் கொடுத்தவர்கள் புகார் அளியுங்கள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி உத்தரவைக் கொடுத்து பணத்தை ஏமாற்றியவர்கள் குறித்து இளைஞர்கள், பெற்றோர் ஆகியோர் தைரியமாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

7. அக்.1 முதல் பாண்டியன் பல்லவன் வைகை ரயில்களின் நேரம் மாற்றம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாண்டியன், பல்லவன், வைகை ஆகிய சிறப்பு ரயில்களில் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

8. தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசாத விஜய்!

தனது புகழைப் பயன்படுத்தி அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம், நடிகர் விஜய் தொடர்ந்து பேசாமல் இருந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

9. 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

10. இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 30

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details