தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - Important news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 7 AM
Top 10 news @ 7 AM

By

Published : Sep 26, 2021, 7:01 AM IST

1. SRH vs PBKS: கடைசி ஓவர் வரை பரபரப்பு; இம்முறை பஞ்சாப் வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

மனமிருந்தால் போதும் எதையும் வெல்லலாம் என குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாற்றுத் திறனாளி ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

3. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

4. கரோனா கால தடையும் தாண்டி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

கரோனா கால தடையும் தாண்டி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மாணவி குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

5. இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 26

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

6. இணையத்தில் வைரலாக பறந்துவரும் சினேகா துபே - யார் இவர்?

ஐநா மன்றத்தில் இந்திய தரப்பில் தனது வாதத்தை முன்வைத்த மன்றத்தின் இந்திய முதன்மை செயலாளர் சினேகா துபே, இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். இவரது ஐநா மன்ற உரை இந்தியர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தும் நாடுகளை எதிர்க்க வேண்டும்

பிற்போக்கு சிந்தனைகளையும், பயங்கரவாதத்தையும் அரசியல் கருவியாக பயன்படுத்தும் நாடுகளை எதிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார்.

8. 'மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை' - எஸ்.ஐ ஆடியோ வைரல்

காவல்துறையின் மன அழுத்தம் காரணமாக, மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை என பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் உருக்கமாக பேசியயிருக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

9. எஸ்பிபி நினைவிடத்தில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைப்பு - எஸ்பி சரண்

மறைந்த பாடகர் எஸ்பிபி நினைவிடத்தில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்துள்ளார்.

10. IPL 2021: ராஜஸ்தானை வீழ்த்தி டாப் டக்கரான டெல்லி!

ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details