தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - ஈடிவி பாரத்தின் செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 7 AM
Top 10 news @ 7 AM

By

Published : Sep 25, 2021, 7:08 AM IST

Updated : Sep 25, 2021, 7:24 AM IST

1. வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று நம்பப்படுகிறது.

2. யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - 761 பேர் தேர்ச்சி

யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்களில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3. வேலூர் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..!

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு தொடர்புடைய ஆவணங்கள் வேலூர் ஆவின் நிறுவனத்தில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வேலூர் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

4. இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 25

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

5. ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளத்தில் வெளியிடுகிறது.

6. மோடியின் அமெரிக்க பயணமும், தலைவர்களுக்கு வழங்கிய பரிசுப்பொருள்களும்...

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி நினைவு பரிசாக கலை நயம்மிக்க குலாபி மீனாகரி செஸ் போர்டை வழங்கியுள்ளார்.

7. அக்டோபர் 1 முதல் கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள் திறப்பு

அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய தளர்வுகள் அளிக்கப்படவுள்ளதால், திரையரங்குகளை முழுமையாக திறக்க கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

8. நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

மகாராஷ்டிரா மாநில பெண் காவலர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து, 8 மணிநேரமாக அரசு குறைத்துள்ளது. இதற்கான உத்தரவை காவல் துறை தலைவர் சஞ்சய் பாண்டே வெளியிட்டார்.

9. ஐபிஎல் 2021: ஆர்சிபியை வீழ்த்திய சிஎஸ்கே - புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

10. ஷாக் கொடுத்த சீனா - மெய்நிகர் பண வர்த்தகத்திற்கு தடை

மெய்நிகர் பணம் வர்த்தகம் செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது. உலகளவில் இருக்கும் வர்த்தகர்களை இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பிட் காயின் போன்ற பிரபல மெய்நிகர் பணத்தின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

Last Updated : Sep 25, 2021, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details