தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2021, 5:23 PM IST

ETV Bharat / bharat

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

5PM
5PM

1. ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோயம்புத்தூரில் பாஜக நிர்வாகி ஒருவர் ஒரே ஒரு வாக்கு பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. நீட் தேர்வு எதிர்ப்பு - ராஜஸ்தான் முதலமைச்சருடன் திருச்சி சிவா சந்திப்பு

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை சந்தித்த திமுக எம்பி திருசசி சிவா, நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்தை வழங்கி ஆதரவு கோரினார்.

3. பெருங்குடி குப்பை கிடங்கு அகழ்ந்தெடுக்கும் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்" - கே.என்.நேரு

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு அகழ்ந்தெடுக்கும் பணி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

4.குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

இரண்டு முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

5. கேரள கனமழையில் உயிரிழந்த இரு குழந்தைகள்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததில், ஆறு மாத குழந்தையும், அதன் எட்டு வயது சகோதரியும் உயிரிழந்தனர்.

6. சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்ப பெறும் ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தானின் கட்டாய திருமணப் பதிவு (திருத்தம், 2009) மசோதா, குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் என சர்ச்சை கிளம்பிய நிலையில், மசோதாவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

7.உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்காது - பூபேஷ் பாகல்

யோகி ஆதித்யநாத் அரசின் மீது பெரும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது எனவும், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்காது என்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

8. எங்கள் உலகம் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறியுள்ளது - நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

9. ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளர் காலமானார்

ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளரும், தயாரிப்பாளருமான மகேஷ் கொனேரு இன்று (அக்.12) மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

10. 30 மணிநேரத்தில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details