தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 9 AM - காலை 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

செய்தி சுருக்கம்
செய்தி சுருக்கம்

By

Published : Aug 31, 2021, 9:14 AM IST

1. முடிந்தது 20 ஆண்டுகள் அரண்: வெளியேறிய அமெரிக்கப் படை!

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

2. காவலருக்குப் 'பளார்' - கத்தியைக் காட்டி மிரட்டிய லாரி ஓட்டுநர் கைது

மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்துக் காவலரைக் கன்னத்தில் அறைந்து, கத்தியைக் காட்டி மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

3. குப்பையில் கிடந்த பொருட்களை சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

குப்பையில் கிடந்த காலாவதியான பொருள்களை சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

4. நினைவில் சேர்ந்திருப்போம்... யுவனும் முத்துவும் இசையின் நட்பு! #HBDyuvan

காதல் கொண்டேனை முடித்துவிட்டு, 7ஜி ரெயின்போ காலனிக்குள் இவர்கள் இருவரும் நுழைந்தபோது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. யாரையும் இவர்கள் ஏமாற்றவில்லை. மாறாக, தன் இசையின் தளத்தை யுவன் ஷங்கர் ராஜா இந்தத் திரைப்படத்தில் மாற்றிவைத்தார்.

5. PARALYMPIC SHOOTING: இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் ரூபினா ஃபிரான்சிஸ்

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் தகுதிச்சுற்றில் ஏழாவது இடத்தைப் பிடித்து, இறுதிச்சுற்றுக்குத் தகுதிப்பெற்றுள்ளார்.

6. 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக பிரமுகருக்கு வலைவீச்சு!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

7.கே.டி. ராகவன் விவகாரம்; சீமான் கருத்தை வரவேற்ற பால். கனகராஜ்!

ஒருவரின் அந்தரங்கத்தை வெளியிட்டால் வெளியிட்டவரைதான் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறிய சீமான் கருத்துக்கு பாஜகவின் பால். கனகராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

8. வடிவேலு பாணியில் முதலமைச்சரை விமர்சித்த சீமான்

7 பேர் விடுதலை தொடர்பாக 30 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தை மீண்டும் முதல் புள்ளியில் கொண்டுபோய் நிறுத்தி விட்டார்கள். வடிவேலு பாணியில் மறுபடியும் முதலில் இருந்தா என கூறும் விதமாக ஸ்டாலினின் நடவடிக்கை அமைந்துவிட்டது என சீமான் தெரிவித்துள்ளார்.

9.மாலத்தீவில் மாடர்ன் மோனலிசா கிளிக்ஸ்

மாலத்தீவில் மாடர்ன் மோனலிசா கிளிக்ஸ்

10. தமிழ்நாட்டில் செப். 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details