தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாலை 5 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ...

மாலை 5 மணி செய்தி சுருக்கம்
மாலை 5 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jun 20, 2021, 5:08 PM IST

1. 11 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: எவை எவைக்கு அனுமதி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து, தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. ஊரடங்கு நீட்டிப்பு: பொது போக்குவரத்து, படப்பிடிப்பிற்கு அனுமதி

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்து, படப்பிடிப்பிற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. 27 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி

கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், திருப்பூர் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு இ-பாஸ் விண்ணப்பித்து, அனுமதி பெற்று பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

4. நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

5. 'கரோனா உயிரிழப்பு; வெள்ளை அறிக்கை வெளியிடுக' - சீமான்

கரோனா நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கையின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

6. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றவர் கைது - எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை!

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக, ராஜஸ்தான் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்றவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

7. 'கங்கா தசரா' திருவிழா - அலைமோதும் மக்கள் கூட்டம்

கங்கா தசராவை முன்னிட்டு உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்டில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் புனித நீராடலில் ஈடுபட்டனர்.

8. நடக்க முடியாத ஆட்டுக்குட்டியை ’பிளாஸ்டிக் பைப்’ சக்கரக்கால்களுடன் ஓட வைத்த பேரன்பு!

”இனி ஆட்டுக்குட்டி நடக்காது என்று தெரிந்தவுடன் அதை கசாப்புக் கடைக்கு விற்கச் சொல்லி உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. தற்போது ஆட்டுக்குட்டி நடக்கிறது, ஓடுகிறது” என சைமன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

9. தந்தையர் தினத்தன்று மன்னிப்பு கடிதம் எழுதிய ரியா

ரியா போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒரு மாத காலம் மும்பை பைகுல்லா சிறையில் இருந்தார்.

10. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : காலியான கிங் கோலி; குஷியில் நியூசி.,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நிதானம் காட்டிவந்த இந்திய கேப்டன் கோலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details