தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக்கை கைது செய்ய இடைக்காலத் தடை - நிகிதா ஜேக்கப்

டெல்லி: டூல்கிட் வழக்கில், நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் ஆகியோரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

டெல்லி நீதிமன்றம்
டெல்லி நீதிமன்றம்

By

Published : Mar 9, 2021, 6:36 PM IST

விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட்டை நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் ஆகியோர் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியுடன் சேர்ந்து சமூக வலைதளத்தில் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், மார்ச் 15ஆம் தேதி வரை நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

டெல்லி காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை படிக்க போதுமான அவகாசம் வேண்டும் என இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில், கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா இடைக்காலத் தடை விதித்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக், திஷா ரவி ஆகியோர் மீது தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த வேளாண் சட்டங்கள் தொடர்பான டூல்கிட் என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திஷா ரவி, நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோர் இணைய ஆவணமான டூல்கிட்டை தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details