புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று (மார்ச் 30) புதுச்சேரி வந்தார். இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகைபுரிகிறார். இன்று (மார்ச் 31) இரவு விமானம் மூலம் சென்னை வரும் அவர் அங்கு உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து நாளை காலை ஒன்பதரை மணியளவில் புதுச்சேரி வருகிறார். பின்னர் அவர் புதுச்சேரி சித்தாந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, லாஸ்பேட்டை தொகுதி வேட்பாளர் சுவாமிநாதன், காமராஜ் நகர் வேட்பாளர் ஜான்குமார், காலாப்பட்டு தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரை ஆதரித்துப் பரப்புரைச் செய்கிறார்.