டெல்லி: இந்தியாவில் தக்காளி காய்ச்சல் முதன்முதலாக கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஏற்பட்டது. நாட்டில் இதுவரை 82 குழந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தக்காளி காய்ச்சல் பரவி வருவதால், அதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தக்காளி காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவியுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், இணை நோய்கள் கொண்ட பெரியவர்களுக்கும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்ற வைரஸ் தொற்றுகளைப் போலவே, காய்ச்சல், சோர்வு, உடல்வலி, கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், தக்காளி காய்ச்சல், கரோனா, குரங்கம்மை, டெங்கு, சிக்கன்குனியாவிலிருந்து வேறுபட்டது.