தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைப்பொருள் வழக்கு: ராணாவிடம் அமலாக்கத் துறை கிடுக்கிப்பிடி விசாரணை - இயக்குநர் பூரி ஜெகநாதர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போதைப்பொருள் வழக்குத் தொடர்பாக பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

Tollywood drugs case, Rana Daggubati quizzed by ED, Rana Daggubatti, Rana Daggubati appears before ED, Rana Daggubati questioned by ED, நடிகர் ராணா டகுபதி, போதை பொருள் வழக்கு, தெலுங்கு நடிகர்கள் போதை பொருள், சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் பூரி ஜெகநாதர்
ராணாவிடம் அமலாக்கத் துறை கிடுக்கிப்பிடி விசாரணை

By

Published : Sep 8, 2021, 7:41 PM IST

Updated : Sep 8, 2021, 7:55 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): போதைப்பொருள் வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத் துறை அலுவலர்கள் முன்பு நடிகர் ராணா டகுபதி இன்று ஆஜரானார்.

2017ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகநாதர், நடிகர்கள் ராணா டகுபதி, நவ்தீப், ரவிதேஜா, நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 12 பேர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், போதைப்பொருள் விவகாரத்தில் பண மோசடியும் நடந்துள்ளதாகத் தெரியவந்தது. இதனையடுத்து அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

அதன்படி, இயக்குநர் பூரி ஜெகநாதர், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.

போதை பொருள் வழக்கு - ராணாவிடம் அமலாக்கத் துறை கிடுக்குப்பிடி விசாரணை

தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்காக நடிகர் ராணா டகுபதி, ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று (செப். 8) ஆஜரானார்.

Last Updated : Sep 8, 2021, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details