பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கம் ஆகும். அவருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " நீங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளீர்கள். உங்கள் பெயரை வரலாற்றில் எழுதியுள்ளீர்கள். வாழ்க்கைப் பயணம் விளையாட்டு துறையை நோக்கி இளைஞர்கள் வருவதற்கு ஊக்குவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.