தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி - PV Sindhu

இந்த வீடியோ கான்பரன்சிங்கின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது குறித்து மோடி விசாரித்தார். அதற்கு பிவி சிந்து தனது பயிற்சி குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Jul 13, 2021, 8:02 PM IST

டெல்லி: ஜூலை 23ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம், இந்திய விளையாட்டு வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி உரையாடவுள்ளார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வீடியோ கான்பரன்சிங்கின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது குறித்து மோடி விசாரித்தார். அதற்கு பிவி சிந்து தனது பயிற்சி குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்லவிருக்கும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தான் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலியை பார்த்து உத்வேகம் அடைந்ததாக மோடியிடம் தெரிவித்தார்.

இதேபோல் பல்வேறு விளையாட்டு வீரர்களும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மோடி சமீபத்தில் இந்த விளையாட்டு வீரர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 119 தடகள வீரர்கள் உள்பட 228 பேர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:இந்தியாவின் முதல் கரோனா நோயாளிக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details