ஹல்த்வானி:உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 42 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியாவார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில் “கோட்டாபாக்கின் சந்த்பூர் கிராமத்தில் பிகார், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிகாரை சேர்ந்த ஒரு தம்பதி தனது 3 வயது பெண் குழந்தையுடன் தங்கி கூலி வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு அங்கேயே குடிசை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது
உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 42 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேற்கு வங்க தொழிலாளி கைது
இந்த குடிசையில் நேற்று குழந்தை தனியாக இருந்த நேரத்தில் அங்கு பணிபுரிந்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 42 வயதான நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பியபோது, இதுகுறித்து தெரியவந்துள்ளது. அதன்பின் விசாரணையில் அந்த 42 வயது நபரை கைது செய்தோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"தற்கொலை செய்து கொள் இன்சூரன்ஸ் தொகையை நான் பெற்றுக் கொள்கிறேன்" - மனைவியை மிரட்டிய கணவர்