மேஷம்: குழந்தைகள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை நினைத்து, நீங்கள் இத்தனை நாள் உழைத்து வந்தீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். மருத்துவத் துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக அமையும்.
ரிஷபம்: ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேலதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்: சில குறிப்பிட்ட நபர்களுடனான உறவு உணர்வு பூர்வமானதாக இருக்கும். இதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் பிற்பகுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை எதிர்நோக்க நேரிடும். எனினும், பதற்றம் அடையாமல் நிதானமாக கையாண்டால் அதில் இருந்து தப்பிக்கலாம்.
கடகம்: பணியை பொறுத்தவரை மிகவும் சாதகமாக இருக்காது. வேலையில் மனம் இல்லாமல் குழப்பமான மனநிலை இருக்கும். குழந்தைகள் பிரிவால் தனிமையாக உணர்வீர்கள்.
சிம்மம்: அனைத்து முடிவுகளையும் நன்றாக சிந்தித்து விரைவாக மேற்கொள்வீர்கள். உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். வழக்கமான பணி தான் என்றாலும், கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவது நல்லது. சிலருடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் செயல்படவும்.
கன்னி: குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பேச்சு திறன் மற்றும் அறிவாற்றல் காரணமாக சச்சரவுகளைத் தீர்த்து விடுவீர்கள். பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அனைத்தையும் அமைதியாக அணுகுவீர்கள்.