தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருக்கார்த்திகை தீபத் திருநாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?

November 26, 2023 Rasipalan: கார்த்திகை 10, நவம்பர் 26 ஞாயிற்ற்க்கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 6:17 AM IST

மேஷம்: இன்று மலரும் நினைவுகள், உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். இது உங்கள் பணியில் எதிரொலிக்கும். இதனால் மற்றவர்கள், உங்களது கனிவான தன்மை மற்றும் இளகிய மனத்தை அறிந்து கொள்வார்கள். நீங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவழித்து, சேமிப்பீர்கள்.

ரிஷபம்: உங்கள் செயல்களில் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உங்கள் உறுதியான நிலைப்பாட்டை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய பணிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சாதகமான நாள் அல்ல. அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மென்மையாக பேசவும்.

மிதுனம்: உங்களது கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக, உங்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும், நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். உங்களது அறிவுத் திறன் காரணமாக உங்களுடன் மோதுவதை நிறுத்தி விடுவார்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கடகம்: நீங்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அவர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆனால், உங்கள் மனதில் கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனினும், நீங்கள் நண்பர்களுடன் பொழுதைக் கழித்து, மாலையில் கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: உங்கள் வாழ்க்கையில், இத்தனை நாட்களாக சந்திக்க காத்திருந்த ஒரு நபரைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக் கூடும். உங்கள் காதல் துணைக்கு, அழகான பரிசு ஒன்றை அளிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கலையில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை நீங்கள் வெளிப்படுத்தி, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி: செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாகவும் மேம்படுவீர்கள்.

துலாம்: உங்கள் காதல் துணையுடன் நெருக்கமாக பழகுவதற்கான சரியான நாளாகும். அதிக வேலை காரணமாக, நீங்கள் நெடுநாட்களாக, ஒன்றாக நேரத்தைக் கழிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. உங்கள் காதல் துணையுடன், மாலையை இனிமையாக கழிப்பீர்கள். நீங்கள் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். இன்றைய தினத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்: நீங்கள் கவனத்துடன், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வேறு ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையினால், எதிர்பாராத விதமாக நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்னும் நீங்கள் கவனமாக எச்சரிக்கையுடன் நடந்தால், தர்மசங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம். பழைய அனுபவங்கள் மூலம் இதனை கற்றுக் கொள்ளலாம்.

தனுசு: ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு தொடக்க நிகழ்ச்சியில் நீங்கள் முக்கியமானவராக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. நெடுந்தூர வர்த்தக பயணம் மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கவும்.

மகரம்: கடந்த சில மாதங்கள் உங்களுக்கு மிக கடினமானதாக இருந்தன. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான சந்தோஷத்தை இழந்திருப்பீர்கள். உங்கள் அர்ப்பணிப்பும், உழைப்பும் நீங்கள் அடைய விரும்பிய உயரத்துக்கு உங்களை இட்டுச் செல்லும். மிக ஓய்வாக உட்கார்ந்து, பலன்களை அறுவடை செய்து அனுபவிக்க வேண்டிய நேரம் இது.

கும்பம்: மிக சிக்கலான பிரச்னைகளுக்கும் எளிதாக தீர்வு காணும் வகையில் இருக்கும். சிலர் தங்கள் சுமைகளையும், பொறுப்புகளையும் உங்கள் மீது இறக்கி வைக்கலாம். உங்கள் பலவீனங்களை வலுவாக்க, இது உங்களுக்கு மிகவும் பொன்னான தருணம். எனவே, எரிச்சல் அடையாமல் மிகக் கவனமாக இருக்கவும்.

மீனம்: உங்களுக்கு இன்று சாதகமான சூழ்நிலை இல்லை. எனவே, நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details