தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நண்பர்களுக்காக மீன ராசிக்காரர்கள் இன்று செய்யப்போவது என்ன? - ஜோதிடம்

December 9 2023 Rasipalan: கார்த்திகை 23, டிசம்பர் 9 சனிக்கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:13 AM IST

மேஷம்: நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருந்து, அவர்கள் மனதை வெல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில காரணங்களுக்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பாக இப்படியான உணர்வு இருக்காது. எனினும், புதிய நண்பர்கள் உடன் விருந்துக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: இன்றைய தினம் சில அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்க்கப்பட்டபடி எதுவும் நடக்காது. எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால் கடவுளின் ஆசி காரணமாக, இந்த நிலைமையை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வீர்கள். மாலையில் நிலைமை மேம்படக் கூடும். பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாமல் இயல்பு நிலை ஏற்படும்.

மிதுனம்: இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர்கள். ஆனால் இன்று வித்தியாசமாக, நீங்கள் வெளியில் சென்று உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்: பணியிடத்தில் சிறந்த கூட்டாளி உறவை ஏற்படுத்தும் உங்களது திறமையின் காரணமாக, முக்கிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது கவனமாக செயல்படுவது முக்கியம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனையே முழுமையாக படித்து அறிந்து கொள்வது நல்லது.

சிம்மம்: புத்துணர்வு மற்றும் புத்துயிர் - இந்த இரண்டு வார்த்தைகள் இன்றைய தத்துவமாக இருக்கும். உங்களை புதுப்பிக்க செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பதாகும்.

கன்னி: இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்: தொடர்பு மற்றும் வெளிப்பாடு - பணியிடத்தில் இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் சிறந்த வகையில் கையாளும் திறன் உண்டு. வர்த்தக ஆலோசனை என்றாலும், கூட்டங்கள் என்றாலும் நீங்கள் இதில் சிறந்து விளங்குவீர்கள். மக்களை தொடர்பு கொள்வது உங்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. எனினும் மாலைப்பொழுது உங்கள் மனதிற்குப் பிடித்தவருடன் நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள்.

விருச்சிகம்: உறவுகளை நீங்கள் அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் உருவாகிறது. இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.

தனுசு: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகு முறையின் காரணமாக, கடினமான பிரச்னைகளையும் எளிதாக கையாள்வீர்கள். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.

மகரம்: கடந்த கால நினைவுகள் உங்கள் மனதில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும் மனதிற்குப் பிடித்தவர்கள் உடன், இனிமையாக மாலைப் பொழுதை கழிப்பது, சோர்வை நீக்கி அடுத்த நாள் பணிக்கு நீங்கள் தயாராக உதவியாக இருக்கும்.

கும்பம்: கவலையும், மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பிளம்பிங் பணி, துப்புரவு பணி, மளிகை சாமான் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளின் காரணமாக வாக உணர்வீர்கள். ஆனால் மாலை நேரத்தில், மசாஜ் காரணமாக, சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிகளை உணர்ந்த பிறகுதான், சந்தோஷத்தின் மதிப்பை உணருகிறோம்.

மீனம்: உங்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட நண்பர்களே உங்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன், சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு, நிம்மதியாக இருப்பீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details