தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Horoscope:மேஷம் தனிமை... ரிஷபம் ஆற்றல்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன? - Taurus

Today Rasi Palan: ஆகஸ்ட் 6ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

rasi palan
ராசிப்பலன்

By

Published : Aug 6, 2023, 6:52 AM IST

மேஷம்:நீங்கள் தனியாக இருக்கலாம், ஆனால் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேட்டு, உங்களுடைய அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலில் அன்பானவர்களுடன் அமர்ந்து இசையை ரசித்துக் கொண்டே மாலை நேரத்தைச் செலவிடுங்கள்.

ரிஷபம்:இன்று, உங்கள் பழக்கத்தால் இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிக்கலாம். வீட்டு வேலைகள் மதியம் வரை இழுத்தடிக்கும். அதன்பிறகு, உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக மட்டுமே நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். உங்கள் அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மிதுனம்:மற்றவர்களின் செயல்களைப் பற்றி கவலைப்படாமல் சமுதாயத்தில் உங்கள் சொந்தக் காலில் நிற்பதில் கவனம் செலுத்துவதும், சமூகத்தில் நிலைத்து நிற்பதும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லாபத்தையும், விறுவிறுப்பான வர்த்தகத்தையும் பார்ப்பார்கள்.

கடகம்:உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், அது உங்கள் அருகில் இருப்பவர்களை காயப்படுத்தும். எழுத்தாளர்கள், உயர் தரமான படைப்பை படைக்கலாம். கலைஞர்களுக்கு உகந்த நாள் இன்று. புதிய சவால்களை எதிர்கொள்ள ஏற்ற நேரம் இது.

சிம்மம்: நாம் உருவாக்கும் நண்பர்களே, நீண்ட கால அடிப்படையில் நாம் யார் என்பதை உருவாக்கும் காரணியாக இருக்கிறது. கடந்த காலங்களில், உங்கள் இயல்பான உள்ளுணர்வால் நீங்கள் கட்டமைத்த சமூக வட்டத்தில் அர்ப்பணிப்புள்ள நண்பர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.

கன்னி: இன்று அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள். உங்கள் மன அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் காரணிகள் எதுவும் இல்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பதோடு, தடைகளை சமாளிக்க அர்ப்பணிப்புடன் உழையுங்கள். ஊக்குவிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகூட உங்களுக்கு ஒப்படைக்கப்படலாம்.

துலாம்:எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால், கடந்த கால அனுபவங்களே அதற்கு முதலீடு. உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்திக் கொண்டால், உங்களுடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படக்கூடிய அருவருப்பான சூழல்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்து, பொதுவாகவே இந்த நாள் இயல்பானதாகவே இருக்கும். உங்களுடைய புரிதலுக்கும், அணுகுமுறைக்கும், இன்று பாராட்டும் மதிப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்: நீண்ட கால முதலீடுகளிலும் ரியல் எஸ்டேட்களிலும் முதலீடு செய்ய நல்ல நாள் இன்று. இது நீண்டகால நன்மைகளையும் லாபங்களையும் கொடுக்கும். உட்கார்ந்து, ஓய்வெடுக்கவும், வாழ்க்கையில் இதுவரை தவறவிட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க ஏற்ற நேரம் இது. திறந்த மனதுடன் உங்களை நோக்கி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் வரவேற்கவும்.

தனுசு:மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையின் பாதகமான விளைவுகளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டதால் நிலைமை மாறும் வாய்ப்புகள் தென்படுகிறது. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கவும். நல்ல செய்தி அல்லது வேலை உயர்வுடன் சம்பள உயர்வு போன்றவற்றுடன் இந்த மாற்றம் தொடங்கும்.

மகரம்: உணர்வுபூர்வமான மற்றும் அதீத உரிமை உணர்வை வெளிப்படுத்த வேண்டாம். அவை உங்கள் கணிப்பை மேகம் போல் மறைத்து, உங்கள் வெற்றிக்கு தடையாக மாறிவிடும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.

கும்பம்:ஏதேனும் இலக்கை அமைத்து, அதை அடைவதற்காக செயல்படவும் அல்லது ஏதாவது சவால் ஒன்றை ஏற்றுக்கொள்ளவும். அவற்றில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் சாதனைகளைப் பற்றி பிறர் பாராட்டுவார்கள். உங்கள் நண்பர்களும், குடும்பத்தைப் போன்றே பாசமாக இருப்பார்கள். மற்றொரு மும்முரமான வேலை நாளை தொடங்குவதற்கு முன்பே, அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது நேரத்தை செலவிடுங்கள்.

மீனம்:இதயத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் மிகவும் நெகிழ்வுடனும், உணர்வுபூர்வமாகவும் இருப்பீர்கள். உங்களை நன்கு அறிந்தவர்களுக்கும் இது பிடிக்கும் என்றாலும், மனதிற்குக் நெருக்கமானவர்களை சற்று கண்காணிப்பது நல்லது. ஏனெனில், அவர்களின் அன்பு உங்கள் கண்களை மறைத்து, தவறுகளை மட்டுப்படுத்தி காண்பிக்கும். அல்லது நீங்கள் அவற்றை மன்னித்து மறந்துவிடுவீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details