தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நல்லா தூங்குனீங்களா..! இன்று உலக தூக்க தினம்! - தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்

இன்று உலக தூக்க தினம்(World Sleep Day). உறக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்வோம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 17, 2023, 11:21 AM IST

ஐதராபாத்:தூக்கம்.. மனித குலம் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். துன்பம், சோகம், குடும்பப் பிரச்சினை, அலுவலக தொந்தரவுகள், தனிப்பட்ட பிரச்சினை என எந்தவொரு நினைவலையும் இல்லாமல், அனைத்தையும் தொலைத்து நிம்மதியை தேடுவது தூக்கத்தில் மட்டும் தான்.

அப்படி நாளொன்றுக்கு தன்னை மறந்து நிம்மதி நிலைக்கு கொண்டு செல்லும் தூக்கத்திற்கு, இன்று உகந்த தினம். இன்று உலக தூக்க தினம்(World Sleep Day) கடைபிடிக்கப்படுகிறது. உடல் ரீதியிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியன தூக்கமின்மையே காரணம் என மருத்துவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

போதிய தூக்கமின்மை காரணத்தால் தீவிர உடல் உபாதைகள், உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என பல்வேறு கட்டமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்து உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நல்ல தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் நமது மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்வதற்கு நல்ல நிம்மதியான தூக்கம் உதவுகிறது. தற்போது உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகெங்கிலும் உள்ள மக்களிடையே தூக்கமின்மை தழைத்தோங்குகிறது. போதிய தூக்கம், பல்வேறு கட்ட பிரச்சினைகளில் இருந்து தீர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுற்த்தும் வகையில் ஆண்டுதோறும் உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையை உலக தூக்க தினமாக கடைபிடிக்கக் கோரி இலாப நோக்கமற்ற அமைப்பான வேர்ல்ட் சிலீப் சொசைட்டி (World Sleep Society) என்ற அமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. நல்ல தூக்கம் சிறந்த உடல் நலத்திற்கு முக்கியமான ஒன்று.

ஆனால் அண்மை காலங்களாக பலர் தூக்கமின்மையால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களே தூக்கமின்மையை உருவாக்கி பல்வேரு பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சரியான தூக்கமின்மையால் இன்சோம்னியா, தூக்கத்தில் மூச்சுத் திணறலை ஏற்படும் சிலீப் அப்னியா (sleep apnea) உள்ளிட்ட பல்வேறு தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிலீப் அப்னியா என்பது தூக்கத்தில் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் ஒருவித தீவிர தூக்கக் கோளாறு ஆகும். சத்தமாக குறட்டைவிட்டு, முழு இரவு தூக்கத்திற்கு பிறகும் ஒருவர் சோர்வாக உணர்ந்தால், அவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாளொன்றுக்கு போதுமான அளவில் தூங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் கல்வித் திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு உலக தூக்க தினம், "தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது" என்ற கருப்பொருளை மையமாகன் கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறதாக மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் முறையான தூக்கம், உடல் எடையை பராமரிக்கவும், உடலின் செறிவுத்தன்மையை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியம், நீரிழிவு பிரச்சினை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:Arunachal Helicopter crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details