மேஷம்: மிகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். மனதில் மகிழ்ச்சி பொங்கும். தோட்டத்தில் வேலை செய்வது, செடிகள் நடுவது அல்லது சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். இந்த உலகத்தில் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்பினால், இதைச் செய்யுங்கள்.
ரிஷபம்:வேலையை முடித்து விட்டு இடத்தை விட்டு வெளியேறத் தயாராகுங்கள். வியாபார ஒப்பந்தங்கள் எளிதில் முடிவடையும். காலையில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் நீங்கள், நாளின் இறுதியில் சோர்வாக உணரலாம். உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை தவிர்த்தால், எதிர்வரும் நாட்களில் பல மோதல்களை தவிர்க்கலாம்.
மிதுனம்: மதம் மற்றும் சமூக பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கவும், அவற்றைப் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்க நேரலாம். உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துங்கள். இதைத் தவிர, சட்டம், கல்வி, சமுதாய கடமைகள், கலாச்சாரம் போன்ற விஷயங்களில் கலந்துரையாடலாம்.
கடகம்: அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும், உங்களுடைய திறமையை உயர் அலுவலர்கள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். அதை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லவோ அல்லது சோகமாக இருக்கவோ வேண்டாம். இறுதியில், உறுதியான மனதைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலை வேளையில், பதற்றமான சூழல் ஏற்படலாம்.
சிம்மம்: நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? சில நற்செய்திகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.அது நன்மைகளை மட்டுமே கொடுக்கும் என்று உறுதியாக தெரிகிறது. இது பணியிடத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். உள்ளார்ந்த திறமைகளுக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும். மேல் அலுவலர்களிடம் இருந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளும், சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவையும் எதிர்பார்க்கலாம்.
கன்னி: பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான திறமைகளும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்கள் என்ற போதிலும், எந்தவித அழுத்தமோ அல்லது சிக்கல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.