மேஷம்:சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.
ரிஷபம்:இன்று உங்கள், தொழிலில் முன்னேற்றம் வாய்ப்பு உள்ளது. இந்த முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. நிதி தொடர்பான வாய்ப்புகளும் வெற்றிகளும் உங்களை வந்து சேரும். பொருள் ஆதாயமும் இருக்கும்.
மிதுனம்:என்றும் உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு உரையாடுவீர்கள். உங்களது நிதி நிலைமை குறித்து உங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்க இது சரியான நேரமாகும். இதனால், உங்களது மன பாரம் குறையும். நீங்கள் புத்துணர்ச்சியுடன், அனைத்தையும் உற்சாகமாக அணுகுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும்.
கடகம்: உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகள் உடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடம் இருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கை துணைக்கான வருங்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும். உங்களுக்கு கிடைத்துள்ளத் துணையை நினைத்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்: வானிலை மாற்றம் போல, உங்கள் மன விலை மாறிக்கொண்டே இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் சோகமாகவும் இருக்கும். எனினும், அமைதியும் நிம்மதியும் ஏற்படும். உங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும்.
கன்னி:உடல் நலன் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னர் ஏற்பட்ட காயங்கள் தற்போது உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இருப்பினும், இன்று அமைதியும் வளமும் ஏற்படும். இன்று வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள்.