மேஷம்:நீங்கள் இன்று ஒரு சவாலான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளலாம். ஆக்கபூர்வமாக அல்லாத ஒரு விஷயத்திற்கு ஆதரவாக நீங்கள் செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதைப் போல் உணரக்கூடும். உங்கள் விருப்பப்படி எதுவும் நடக்கும் வாய்ப்பு இல்லை. சற்று பொறுமையாக இருந்து, மன அழுத்தத்திலிருந்து விடுபடவும்.
ரிஷபம்:இன்று உங்கள் எண்ண ஓட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உங்களது நினைப்பின் காரணமாக, சர்ச்சைகள் ஏற்படலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் வாய்ப்பு உண்டு. உங்களை நீங்களே ஆராய்ந்து கொண்டு செயல்பட்டால், பிரச்சனைகளுக்கான தீர்வினை காணமுடியும்.
மிதுனம்:இன்று நீங்கள் சிறிது வருத்தமாக காணப்படுவீர்கள். உங்களுக்கும் உங்களது காதல் துணைக்கும் இடையான பிரிவு இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களது உணர்வை கட்டுபடுத்த முடியாமல், கோபத்துடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. நிலைமையில் சுற்று முன்னேற்றம் ஏற்பட, உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது.
கடகம்:இன்று, உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். உங்களுக்கு சிறந்த எண்ணங்கள் தோன்றும். உங்கள் புகழும் அதிகரிக்கும். மக்கள் உங்கள் முயற்சிகளை போற்றுவார்கள். (உங்கள் முயற்சிகள் போற்றப்படும்). கடவுளின் ஆசி காரணமாக இது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான நாளாக இருக்கும்.
சிம்மம்:இன்று நீங்கள், ஒரு நாளின் பாதி நேரம், வேலையில் செலவழித்துள்ள நிலையில், அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அலுவலகத்தில் உறவுகளை சிறப்பான முறையில் வைத்துக்கொள்ள, மனமுதிர்ச்சியும் புரிதலும் தேவை. வர்த்தகத்துறையில் நல்ல லாபம் பலனும் பெற இது ஒரு சாதகமான நாளாக இருக்கும்.
கன்னி:இதுவரை நீங்கள் அடைத்து வைத்திருந்த உணர்வுகள், வெளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சொந்தமான பொருட்கள் மீது, பற்றையும் பாச உணர்வையும் வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் இருக்கும் சூழ்நிலை, உங்களுக்குப் பிடித்தமான வகையில் இல்லை என்றால், உங்களுக்கு அமைதியின்மை ஏற்படலாம்.
துலாம்:இன்று உங்களுக்கு நுண் கலைகள் மீது ஆர்வம் இருக்கும். உங்களுக்குள் ஒளிந்து கொண்டுள்ள கலை உணர்வு வெளிப்படும். அழகு உணர்வு மேம்பட்டு, அதனால் வீட்டிற்குள் செய்யப்படும் அலங்காரத்தில், நீங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள்.
விருச்சிகம்:உங்கள் தொழில் துறையில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஒரு நபரை நீங்கள் சந்திக்கக்கூடும். அவருடன் இன்றைய நாள் பொழுதையும் நீங்கள் கழிப்பீர்கள். இதற்கான பலன்கள், நீங்கள் விரும்பத்தக்க வகையில் இல்லாமல் இருந்தாலும், நீங்கள் பொறுமையுடன் இருந்தால், விரைவில் காரியம் கைகூடும்.
தனுசு:இன்றைய தினத்தில், நீங்கள் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பிரச்சனைகளை எதிர்க்கொண்டு, அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று முழுவதும், முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. மாலையில், எதிர்பாராமல் கிடைக்கும் பலன்கள் காரணமாக நீங்கள் ஆச்சரியமடைந்து, மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மகரம்: ஒவ்வொரு நாளும், நம் வாழ்க்கையில் புதுமையாக ஏதேனும் ஏற்படும். நீங்கள் சிறிது மனக்குழப்பம் அடையலாம். அதனால் இன்று முழுவதும், நீங்கள் சிறிது மந்தமாக உணரலாம். ஆனால் பணியை பொறுத்தவரை, நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் பலன் தரும். உங்கள் வருங்கால முயற்சிகளுக்கான பாதுகாப்பான அடித்தளம் ஒன்றை நீங்கள் ஏற்படுத்துவீர்கள்.
கும்பம்:இன்று, நீங்கள் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு உள்ளது! அப்போது புதிய நபர்களை சந்தித்து, அவர்களுடன் ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டு, உங்களது அறிவை மேம்படுத்தி கொள்வீர்கள். நீங்கள் உங்களது ஆற்றல் முழுவதையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நேரிடும் என்பதால், உங்களுக்கு அசதியும் சோர்வும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக, இன்று குதூகலம் நிறைந்த ஒரு நாளாக இருக்கும்.
மீனம்:இன்றைய தினத்தில், பணியில் இருப்பவர்களுக்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். நிலைமையை நீங்கள் பொறுமையுடன் சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றைய நாளின் முடிவில், உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைத்து நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள்.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE: பிப்ரவரி 24ஆம் தேதிக்கான ராசி பலன்கள்!