தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE : மார்ச் 29 ராசி பலன் - உங்க ராசிக்கு எப்படி? - மார்ச் 29 ராசி பலன்

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்றைய (மார்ச் 29) ராசி பலன்களை காண்போம்.

மார்ச் 29 ராசி பலன் TODAY HOROSCOPE MARCH 29 IN 2022
மார்ச் 29 ராசி பலன் TODAY HOROSCOPE MARCH 29 IN 2022

By

Published : Mar 29, 2022, 5:02 AM IST

மேஷம் :இன்று புரிந்துகொள்ள முடியாத அற்புதமான சம்பவங்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அது நீங்கள் எதிர்பாராத சம்பவமாக இருந்தாலும் நன்மை பயப்பதாகவே இருக்கக்கூடும். அது நிலைமையை அடியோடு மாற்றிவிடாது என்றாலும், ஒரு சில விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் வேலையை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ரிஷபம் :உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஏமாற்றம் மற்றும் எரிச்சலின் காரணமாக, பல விஷயங்களில் தேவையில்லாத உரிமையுணர்வுடன் நடந்து கொள்ள நேரிடும். ஊழியர்களை பாதுக்காக்கும் உங்கள் அணுகுமுறை யாருக்கும் உகந்ததாக இருக்காது.

மிதுனம் :நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சுற்றுலா செல்ல விரும்புவீர்கள். சில நாள்களுக்கு முன்னரே திட்டமிட்ட பயணமாகக்கூட இருக்கலாம். வேடிக்கை, கேளிக்கை, பொழுதுபோக்கு நிறைந்த நாள் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம் :நிலுவையிலுள்ள பணிகளை செய்து முடிப்பதற்காக நீங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சொந்த வாழ்க்கையைவிட தொழில் வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் நேரத்தின் பெரும்பகுதியை தொழிலே ஆக்கிரமித்துக்கொள்ளும். மாலையில் உங்கள் காதல் துணையோடு, மகிழ்ச்சியான தருணங்களைக் அனுபவிப்பீர்கள்.

சிம்மம் :இன்று கூட்டாளியை திருப்திப்படுத்த நீங்கள் மேற்கொள்ளாத முயற்சியே இல்லை என்று சொல்லலாம். எனவே, அவர் உங்களிடமிருந்து நழுவி செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இன்று உங்கள் காதல் துணையை கவர்ந்திழுக்க முடியும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது.

கன்னி :வாழ்க்கையில் திருப்பு முனை அவசியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. இன்று எதைச் செய்தாலும் அதை சிறப்பாகவே செய்வீர்கள். இன்று உங்கள் முன்னுரிமை பட்டியலில் பிரதான இடம் பிடிப்பது நிதி விஷயங்கள் மற்றும் உறவுகள் என்றாலும், அவற்றின் வரிசை கிரமம் மாற வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்திற்காக அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு உண்டு.

துலாம் :புதிய விஷயங்களைப் பற்றி அறிந்துக் கொள்ள நீங்கள் இன்று முயல்வீர்கள். உற்சாகம் மற்றும் நேர்மறையான உணர்வால் நிறைந்த நாள் இது. நண்பர்களுடன் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எனவே, அவர்களுடன் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையிடம் இருந்து பல நன்மைகள் இன்று தேடிவரும். நெருங்கிய உறவினரோடு, இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் செலவளிப்பீர்கள்.

விருச்சிகம் :வாழ்க்கையில் இதுவரை அனைத்து உயரங்களையும் அனுபவித்து வந்த நீங்கள், இன்று தொழிலில் இழப்பை சந்திக்க நேரிடலாம். முதலாளி, சகாக்கள் மற்றும் உங்களுக்கிடையே உள்ள புரிதலில் சற்று சுணக்கம் ஏற்பட்டலாம். இருந்தாலும், அதை மாலைக்குள் சரிசெய்து விடுவீர்கள். புதிதாக தொழிலில் இறங்கியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

தனுசு :இன்று எல்லா பொருள்களிலும் அழகும் பிரகாசமும் இருப்பதாக தோன்றும். நீங்கள் இன்று ஒரு ஆர்வலராக செயற்படலாம். நீதி நேர்மைக்காக உண்மையான உறுதியுடன் செயல்படுங்கள். அநீதி மற்றும் பாகுபாட்டை எதிர்க்கலாம். உலகை கைப்பற்றுவது உங்கள் விருப்பம் என்றால் கூட அதையும் இன்று உங்களால் செய்ய முடியும்.

மகரம் :நாளின் முற்பகுதியில் அவநம்பிக்கை ஆக்ரமிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கும். நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலை செய்வதோடு, வெளியாள்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய பணிகளும் சேர்ந்து உங்களை அழுத்தும். இறுக்கமான மனநிலை மாலை வேளையில் மாறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக உணவருந்தும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம் :பெரிய திட்டங்களை தீட்டுவதற்கான முக்கியமான நாள் இன்று. வீடு வாங்குவது தொடர்பான முடிவை எடுக்கும் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றம் அல்லது திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கும் நாளாக இந்த நாள் மாறலாம். திடீரென எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் தென்படுகின்றன. மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் உற்சாகமான நாள் இது. இன்று எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

மீனம் :செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட வேண்டிய நாள் இது. முன்னுரிமை வேலை என்ன என்பது குறித்த யதார்த்தமான தொலைநோக்கு கோணத்தைப் பெறுவதோடு, இருக்கும் நேரத்தில் இலக்கை எவ்வளவு அடைய முடியும் என்ற கணிப்பையும் செய்யவேண்டும். நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பது மேலும் காலதாமதத்திற்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details