மேஷம் :நமக்கு நெருக்கடி இருப்பது சில சமயங்களில், நமது முழு திறமையை வெளிக்கொண்டு வருவதில் உதவியாக இருக்கும். அலுவலகத்தில், சக பணியாளர்களை விட நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். எனினும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உடனடியாக பலனை எதிர்பார்க்க கூடாது.
ரிஷபம் :இன்று நீங்கள் உங்களது நண்பர்களுடன், உங்களது சாதனையை எடுத்துரைக்கும் வகையிலான வெற்றிவிழாவை கொண்டாடுவீர்கள். வர்த்தகத்திலும், அலுவலகத்திலும் உங்களது முற்போக்கான சிந்தனையின் மூலம், வளமான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குதூகலமாக இருப்பீர்கள்.
மிதுனம் :அனைத்து விதமான கூட்டாண்மைகளிலும் ஈடுபடுவதற்கு அருமையான நாள் இது. உங்கள் நெருங்கிய நண்பர்களுடனான பந்தத்திற்கான நாள் இது. இணைந்து கணக்குத் துவங்குதல், ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுதல். எதிர்கால நலனுக்குத் திட்டமிடல் ஆகியவற்றைச் செய்யலாம். நீங்கள் செய்யும் எதிலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மேற்கொண்டு படிப்பதற்கு ஆசைப்படும் உங்களில் சிலர், தெளிவான முடிவை எடுக்கக் கூடும்.
கடகம் :உங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் எதையேனும் மாற்ற விரும்பினால் அதையும் பணத்தை பயன்படுத்தி மாற்றுவீர்கள். பண வரவினால் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் பயனடைவார்கள். அனைத்து தரப்பிலிருந்தும் பணவரவு இருப்பதைப் போல, அனைத்து தரப்பிலிருந்தும் பண விரயமும் இருக்கும்.
சிம்மம் :சில வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். அவை அவை யாவும் நிறைவேறாது. அதேபோன்று இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தை சாதித்தது போல் தோன்றினாலும், அந்தப் பணி நிறைவேறாமல் இருக்கும். வெற்றி கை நழுவிப் போகும். எப்போதும் வெற்றி சாத்தியம் அல்ல என்பதை நினைவில் கொண்டு, ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.
கன்னி :உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.