மேஷம் :உங்களது வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்கு செல்ல தயாராக இருக்கவும். ஏதேனும் ஒரு பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக் கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம் :இன்று, உங்களது கவனம் உங்களது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.
மிதுனம் :நீங்கள் நெடுநாட்களாக ஏற்படுத்த விரும்பிய குடும்பத்தினரின் சந்திப்பை, உங்கள் வீட்டில் ஏற்பாடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் அதற்கு உகந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினரை மட்டுமல்லாமல், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் ஆகியோரையும் நீங்கள் அழைத்து விருந்து அளிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையும் உங்கள் முயற்சியை பாராட்டுவார்.
கடகம் :இன்றைய தினத்தில் நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சு, சிரிப்பு என இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், நீங்கள் உங்கள், வழக்கமான அமைதியான நிலைக்கு திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவு செய்வீர்கள்.
சிம்மம் :இன்று நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையை சிறிது மாற்றி கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
கன்னி : நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம், மற்றவரை விட சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், நீங்கள் உங்கள் பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.
துலாம் :இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மக்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதைப் பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீக்குப் போக்கான அணுகுமுறை மூலம், உங்களது கருத்துக்களை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம் :இன்று நீங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய முயற்சி செய்ய கூடாது. அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். ஆனால் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் இதன் மூலம், பொது மக்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு.
தனுசு :இன்று உங்கள் மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர்தான்.
மகரம் :நல்ல நாளின் தொடக்கம் சிறந்த வகையில் இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையுடன் இன்றைய தினத்தை நீங்கள் தொடங்குவதால், இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பான்மை, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்வாக காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இன்று அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மணவாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.
கும்பம் :இன்று நீங்கள் காதல்வயப்பட கூடும்! திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாக சிறந்த முறையில் நேரத்தை செலவிடுவார்கள். பழைய புகைப் படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மீனம் :ஒரே விதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் நீங்கள், தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!