தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமியின் பிறப்புறுப்பில் வரும் ரத்தத்தால் திருமண தடை நீங்கும்.. ஆசிரியர், ஜோதிடர் கைது - பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்காளத்தில் சிறுமியின் பிறப்புறுப்பில் வரும் ரத்தத்தால் திருமண தடை நீங்கும் என கூறிய ஜோதிடர் மற்றும் அதற்காக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் பிறப்புறுப்பில் வரும் ரத்தத்தால் திருமண தடை நீங்கும்.. ஆசிரியர், ஜோதிடர் கைது
சிறுமியின் பிறப்புறுப்பில் வரும் ரத்தத்தால் திருமண தடை நீங்கும்.. ஆசிரியர், ஜோதிடர் கைது

By

Published : Nov 1, 2022, 9:40 AM IST

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு, 37 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் இவர் ஜோதிடரை அணுகியுள்ளார். அப்போது ஜோதிடர், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வரும் ரத்தத்தில் நனைந்த துணியை எடுத்து வந்தால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதனால் தன்னுடைய வகுப்பில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தொடர்ந்து கடந்த வாரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் (அக் 30) ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆறு வயது சிறுமியை ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ செய்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details