டெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, நிஷா பானு அமர்வு அமா்வு, மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டாா்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது, மேகலா தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபலும், அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
இதையும் படிங்க:கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு; அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!
இதையடுத்து நீதிபதி சி.வி.காா்த்திகேயன் பிறப்பித்த தீா்ப்பில், "செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியும் சட்டத்திற்கு உட்பட்டவர். இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவா்த்தியின் தீா்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன்" என தீர்ப்பு வழங்கினார்.