சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நேற்று முன்தினம் (ஜூன் 19) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கேரள முதலமைச்சர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை நேற்று (ஜூன் 20) உடனடியாக திறந்து விட்டது.