தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் மலர்ந்த நான்கு தாமரைகள் பிரதமருடன் சந்திப்பு! - பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் நால்வரும் இன்று (ஜூலை 3) பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோரை டெல்லி சந்தித்தனர்.

பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு
பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு

By

Published : Jul 3, 2021, 7:25 PM IST

Updated : Jul 3, 2021, 9:08 PM IST

டெல்லி: 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாஜக நான்கு இடங்களில் வென்றது.

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், நான்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன், சி.கே. சரஸ்வதி ஆகியோர் நேற்று (ஜூலை 2) டெல்லி புறப்பட்டனர்.

இதையடுத்து, எல்.முருகன், தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் ஆகியோர் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதன் பின்னர், மேற்குறிப்பிட்ட ஐவரும், பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய சுதாகர் ரெட்டியுடன் சேர்ந்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பாஜக எம்எல்ஏக்கள் ஜே.பி. நட்டா உடன் சந்திப்பு

இதையும் படிங்க: ஐஐடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.. ஜூலை 5இல் கரம் இணைத்திட கோரிக்கை..

Last Updated : Jul 3, 2021, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details